மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம் + "||" + Sri Lankan Navy arrests four fishermen in Pudukkottai district

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கோட்டைப்பட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை பகுதியை சேர்ந்தவர் தொண்டிமுத்து மகன் தொண்டீஸ்வரன் (வயது 25). இவர், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செம்புமகாதேவிபட்டினம் பகுதியில் தங்கி நாட்டுப்படகு மூலம் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.


இந்நிலையில் நேற்றுமுன்தினம் செம்புமகாதேவிபட்டினத்திலிருந்து தொண்டீஸ்வரன் தனது நாட்டுப்படகில், தொண்டீஸ்வரன் மற்றும் நம்புதாளை பகுதியை சேர்ந்த தூண்டி மகன் முத்துமாரி (30), லட்சுமண் மகன் தனிக்கொடி (35), காத்தமுத்து மகன் ராமலிங்கம் (42) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

4 பேர் கைது

இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

மேலும் அவர்களது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சோகத்தையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகு மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2. மேற்கு கடற்கரையில் 31–ந் தேதியுடன் தடைகாலம் நிறைவு: கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்
குமரி மேற்கு கடற்கரை பகுதியில் வருகிற 31–ந் தேதி நள்ளிரவுடன் தடைகாலம் நிறைவு பெறுவதை தொடர்ந்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
3. கடலில் மூழ்கிய 2 குமரி மீனவர்கள் உயிர் தப்பியது பற்றி உருக்கமான தகவல் 8 மணி நேரம் நீந்தி கரை சேர்ந்தனர்
மீன்பிடிக்க சென்ற போது படகு உடைந்து 5 குமரி மீனவர்கள் கடலுக்குள் விழுந்து விட்டனர். இதில் 3 மீனவர்களை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. உயிர் தப்பிய 2 பேர் 8 மணி நேரம் கடலில் நீந்தி கரை சேர்ந்துள்ள உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
4. பலத்த சூறாவளி காற்று: ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை
பலத்த சூறாவளி காற்று காரணமாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.
5. பாம்பனில் இருந்து சென்று சூறாவளி காற்றில் படகு உடைந்து மணல்திட்டில் ஒதுங்கிய 8 மீனவர்கள்; இலங்கை கடற்படையிடம் சிக்கியவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது
சூறாவளி காற்றில் படகு உடைந்து இலங்கைக்கு சொந்தமான மணல் திட்டில் கரை ஒதுங்கிய பாம்பன் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்ய முயன்றது. ஆனால், இந்திய கடலோர காவல் படை அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தது.