நெல்லையில், பேராசிரியரை வழிமறித்து பணம் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது


நெல்லையில், பேராசிரியரை வழிமறித்து பணம் பறிப்பு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 4:00 AM IST (Updated: 22 Aug 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் கல்லூரி பேராசிரியரை வழிமறித்து பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாளையங்கோட்டையை அடுத்த கீழ நத்தத்தை சேர்ந்தவர் சேசுராஜ் (வயது 43). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவர் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பஸ் நிலையம் அருகே சென்றபோது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநள்ளாரை சேர்ந்த தினேஷ் (24), பாளையங்கோட்டை புதுப்பேட்டையை சேர்ந்த முத்துபாண்டி (29) ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து, பணத்தை மீட்டனர்.

Next Story