ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பலி
ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஜீயபுரம்,
ஜீயபுரம் அருகே உள்ள பெட்டவாய்த்தலை தேவஸ்தானத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது 37). பந்தல் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு பெட்டவாய்த்தலை கடைவீதியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி பாய்லர் ஆலையில் இருந்து கரிதுகள்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை டிரைவர் முசிறி வெள்ளூர் பகுதியை சேர்ந்த சத்தியராஜா(25) ஓட்டினார். பெட்டவாய்த்தலை பழையூர் மேடு அருகே சென்றபோது, முன்னால் சென்ற சந்திரசேகரின் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சந்திரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story