ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மோடி ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் எச்.ராஜா பேட்டி


ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மோடி ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 26 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மோடி ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என்று நாகையில் எச்.ராஜா கூறினார்.

நாகப்பட்டினம்,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்ததை ஊடகங்கள் மிகைப்படுத்தி கூறுகின்றன. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு ஆதரவாக உள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியாருக்கு ஆதரவாக 64 வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட ஒரு நீதிபதி மட்டும் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று கோரிக்கை மனு அளிக்கிறார்கள். அந்த 64 வக்கீல்களை பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும். அவர்களை கைது செய்தால் கூட தவறு இல்லை.

மோகன்சி.லாசரஸ், எஸ்றா.சற்குணம், பா.ரஞ்சித், போன்றவர்கள் இந்துக்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தஞ்சை கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், நாகை மாவட்ட தலைவர் நேதாஜி உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.

Next Story