ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சேவை மைய கட்டிடம் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அடிக்கல் நாட்டினார்


ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சேவை மைய கட்டிடம் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 25 Aug 2019 10:45 PM GMT (Updated: 25 Aug 2019 7:14 PM GMT)

பாப்பாநாட்டில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சேவை மைய கட்டிடத்திற்கு ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார்.

ஒரத்தநாடு,

ஒரத்தநாடு ஒன்றியம் பாப்பாநாடு திருமேனி அம்மன் கோவில் அருகில் ரூ. 1 கோடியே 40 லட்சம் செலவில் பல்நோக்கு சேவை மைய கட்டிடம் கட்டுவதற்கு ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., தனது தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து இந்த புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி கல்வெட்டை திறந்து வைத்தார்.

இதில் அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட பால்வளத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் எம்.பி. கு.பரசுராமன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஒரத்தநாடு தெற்கு கோவி.தனபால், திருவோணம் ஆர்.சத்தியமூர்த்தி , கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story