காஞ்சீபுரம் மாவட்டத்தில் 124 ரவுடிகள் கைது - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 124 ரவுடிகள் கைது - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Aug 2019 3:00 AM IST (Updated: 26 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 124 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், வண்டலூர் காவல் துணை கோட்டங்களில் 39 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலைய பட்டியலில் மொத்தம் 479 ரவுடிகள் உள்ளனர். இவர்கள் மீது கொலை, வழிப்பறி, கொள்ளை உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், சூனாம்பேடு, ஸ்ரீபெரும்புதூர், சோமங்கலம், மறைமலை நகர் போன்ற இடங்களில் கடந்த சில நாட்களில் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் காஞ்சீ புரம் மாவட்டத்தில் 124 ரவுடி களை பிடித்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story