மாவட்ட செய்திகள்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு + "||" + DMK as a safety net for minorities Nehru MLA to take part in the protest Speech

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேசினார்.
திருச்சி,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது ஆகியவற்றை கண்டித்தும், சட்ட விரோத தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் ஷபியுல்லா கான் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் அமீன், அமைப்பு செயலாளர்கள் பாதுஷா, சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும்போது ‘நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு சிறுபான்மையின மக்கள் அளித்த ஆதரவு தான் காரணமாகும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதால் எங்களை பெரும்பான்மையினருக்கு விரோதி என சொன்னாலும் பரவாயில்லை என தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். சிறுபான்மையினருக்கு எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அவர்களை பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்போம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோரும் பேசினார்கள். பசு காவலர்கள் என்ற பெயரால் முஸ்லிம்கள் கும்பலாக கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுவழி கோரி ஓட்டல்களை அடைத்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கீரமங்கலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய கோரி ஓட்டல் உரிமையாளர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியல்; போலீசாருடன் கடும் வாக்குவாதம்
அமித்‌ஷா, ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 21 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
3. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. நாகர்கோவிலில் அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டத்தில் அமைச்சரின் உருவப்படம் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.