பழங்கால பொருட்கள் விற்கும் கடையில் ரூ.24 லட்சம் கொள்ளை முன்னாள் ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது
பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.24 லட்சம் கொள்ளையடித்த முன்னாள் ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.24 லட்சம் கொள்ளையடித்த முன்னாள் ஊழியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.24 லட்சம் கொள்ளை
மும்பை பைகுல்லா பகுதியில் பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. கடந்த 13-ந்தேதி இந்த கடைக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள் அங்கு இருந்த ரூ.24 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இந்த கொள்ளை சம்பவத்தில் கடையின் முன்னாள் ஊழியர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கடையின் முன்னாள் ஊழியர்களான முகமது அலிகான் (வயது19), அமீர் கான் (27) ஆகியோரை மும்பையில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கொள்ளையில் தொடர்புடைய ரிஸ்வான் அலி கான்(24) என்பவரை புனேயில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story