குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் இடங்கள் கலெக்டர் தகவல்


குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறும் இடங்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:00 AM IST (Updated: 27 Aug 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 6 தாலுகாக்களிலும் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் வடிவீஸ்வரம் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய இடங்களுக்கு முகாம் நடக்கிறது. ராஜாக்கமங்கலம் நீண்டகரைக்கு ஆலங்கோட்டை அரசு உயர் நிலைப்பள்ளியிலும், சுசீந்திரம் மருங்கூர் மற்றும் நல்லூர் ஆகிய இடங்களுக்கு ராஜாவூர் புனித மிக்கேல் உயர் நிலைப்பள்ளியிலும், கன்னியாகுமரி லீபுரத்துக்கு கிராம நிர்வாக அலுவலகத்திலும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதே போல தோவாளை தாலுகாவில் தெரிசனங்கோப்பு, செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி, கல்குளம் தாலுகாவில் பத்மநாபபுரம், குருந்தன்கோடு, வாள்வச்சகோஷ்டம், ரீத்தாபுரம், சடையமங்கலம், மருதூர்குறிச்சி, செம்பொன்விளை, திருவட்டார் தாலுகாவில் பொன்மனை, செறுகோல், அருவிக்கரை, கிள்ளியூர் தாலுகாவில் கருங்கல், ஆறுதேசம், மத்திகோடு, மெதுகும்மல் ஆகிய ஊர்களுக்கும் முகாம் நடக்கிறது.

நாளை

நாளை (புதன்கிழமை) அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் வடசேரிக்கு வெட்டூர்ணிமடம் ரட்சணிய சேனை மேல்நிலைப்பள்ளியிலும், பறக்கை மற்றும் மதுசூதனபுரத்துக்கு குளத்துவிளை அரசு நடுநிலைப்பள்ளியிலும், மயிலாடிக்கு அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலும், அகஸ்தீஸ்வரம், கோவளம் ஆகிய இடங்களுக்கு அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தோவாளை தாலுகாவில் அழகியபாண்டியபுரம், ஆரல்வாய்மொழி (தெற்கு), ஈசாந்திமங்கலம் (தெற்கு) ஆகிய பகுதிகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது.கல்குளம் தாலுகாவில் கல்குளம், வில்லுக்குறி, திருவிதாங்கோடு, கல்லுக்முகாம், கோதநல்லூர், ஆத்திவிளை, நெய்யூரும், திருவட்டார் தாலுகாவில் தும்பகோடு, அண்டுகோடு, கிள்ளியூர் தாலுகாவில் கீழ்மிடலாம், முஞ்சிறை, முள்ளங்கினாவிளை, அடைக்காகுழி ஆகிய இடங்களிலும் முகாம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story