நாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் சாலை மறியல் 21 பேர் கைது


நாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் சாலை மறியல் 21 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 28 Aug 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் சாலை மறியல் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. அதே போல் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நேற்று சாலை மறியல் நடந்தது. இதற்கு இயக்கத்தின் நிறுவன தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

21 பேர் கைது

உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்று கோட்டாரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Next Story