காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தஞ்சையில், அரசு மருந்தாளுனர்கள் உண்ணாவிரதம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தஞ்சையில் அரசு மருந்தாளுனர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மண்டல தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கூத்தையன்(பெரம்பலூர்), மணிவண்ணன்(திருவாரூர்,) ஜூலைா(நாகப்பட்டினம்), ரவி(அரியலூர்), பாலசுப்பிரமணியன்(புதுக்கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் ஹேமலதா தொடங்கி வைத்தார். போராட்டத்தில் காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மருந்தியல் அல்லாத நோயாளர் நல சங்க பணியில் இருந்து மருந்தாளுனர்களை விடுவிக்க வேண்டும். பழிவாங்கும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பணி நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
மருந்தியல் பணியிடம்
பதவி உயர்வு, தேக்க நிலையை போக்கிட மருந்தாளுனர்களுக்கு கூடுதலாக மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர் மருந்தியல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். மாவட்ட மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். தாலுகா அல்லாத மருத்துவமனைகளிலும் தலைமை மருந்தாளுனர் பணியிடம் உருவாக்க வேண்டும். காசநோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுனர்களுக்கு மற்ற பிரிவினருக்கு வழங்குவது போல 1 மாத கட்டாய விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர்கள் பாஸ்கரன், அசோகன், விஜயலட்சுமி, தியாகராஜன், வள்ளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். உண்ணாவிரத போராட்டத்தை மாநில பொருளாளர் விஸ்வேஸ்வரன் முடித்து வைத்தார்.
இந்த போராட்டத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த மருந்தாளுனர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story