மாவட்டத்தில் புதிதாக 3 கதவணைகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர் மாவட்டத்தில் புதிதாக 3 கதவணைகள் கட்டப்பட உள்ளதாக போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் சோமூர், நெரூர் தென்பாகம் மற்றும் நெரூர் வடபாகம் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்களை பெற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நெரூர் மற்றும் குளித்தலை பகுதியில் தலா ஒரு கதவணைகட்ட ஆய்வு செய்து திட்ட அறிக்கை தாக்கல் செய்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புகளூரில் ரூ.490 கோடியில் கதவணை அமைய இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே உள்ள மாயனூர் கதவணையுடன் சேர்த்து மொத்தம் நான்கு கதவணைகள் அமையும்போது, மொத்தமாக 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும். கரூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் பெற்றுவந்த முதியோர் உதவித்தொகையை தற்போது 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புதிய சமுதாய கூடம்
முதல்-அமைச்சரின் குடி மராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில்் 30 ஆண்டுகள் தூர்வாரப்படாத வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடை வரை தண்ணீர் விரைவாக சென்றது. இப்பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று காளிப்பகவுண்டன் புதூரில் புதிய சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல் அச்சமாபுரம் மற்றும் திருமக்கூடலூரில் விரைவில் புதிய சமுதாய கூடம் கட்டப்பட உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள 394 பேருக்கு குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 4 ஊராட்சி ஒன்றியங் களில் முதல் கட்டமாக கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. எனவே இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
முன்னதாக சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை அமைச்சர் இயக்கிவைத்தார்.
இதில் கரூர் வருவாய் கோட்டாச்சியர் சந்தியா, மண்மங் கலம் வட்டாச்சியர் ரவிக் குமார், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story