மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள்- ஓட்டலுக்கு சீல் வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை + "||" + Acted without permission at Nagercoil Sealing of hotels to hotels

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள்- ஓட்டலுக்கு சீல் வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள்- ஓட்டலுக்கு சீல் வைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவிலில் அனுமதியின்றி செயல்பட்ட விடுதிகள் மற்றும் ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் ஓட்டல்கள், கடைகள் மற்றும் விடுதிகள் போன்றவை பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு செயல்படும் கட்டிடங்களின் உரிமையாளர்கள், உரிய அனுமதி பெற்று தொடர்ந்து கட்டிடங்களில் தங்களது தொழில்களை நடத்தலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை அனுப்பி இருந்தது. ஆனால் பல உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களுக்கு அனுமதி பெறாமல் இருந்து வந்தனர்.


இந்த நிலையில் மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். அதாவது அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிகளாக ஆய்வு செய்து உரிமம் பெறாத கட்டிடங்களுக்கான மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அந்த கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைத்தனர். அந்த வகையில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஒரு ஓட்டல், ஒரு விடுதி மற்றும் 3 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தார்கள்.

கடைகளுக்கு ‘சீல்’

அதன்பிறகு மாலையில் வடசேரி டிஸ்லரி ரோட்டில் 15 கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில், நகர அமைப்பு அதிகாரி விமலா தலைமையில் ஆய்வாளர்கள் கெவின்ஜாய், சந்தோஷ்குமார், மகேஷ்வரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாகர்கோவில் நகரில் ஏற்கனவே மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த கட்டிடங்களுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டன. அதன்பிறகும் ஆய்வு நடத்தி அனுமதி பெறாமல் இயங்கிய கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பினோம். ஆனாலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு அனுமதி பெறாததால் ‘சீல்‘ வைத்துள்ளோம். அண்ணா பஸ் நிலையம் அருகே ‘சீல்‘ வைக்கப்பட்ட ஓட்டலில் கார் பார்கிங் இல்லை. இதனால் ஓட்டலுக்கு வரும் மக்கள் தங்களது வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துகிறார்கள். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பெரிய ஓட்டல்களில் கார் பார்க்கிங் வசதி செய்வது அவசியம். இதே போல் இன்னும் நிறைய கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள் விரைவில் உரிமம் பெற வேண்டும்“ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர், சேவூரில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு ‘சீல்’ அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூர் மற்றும் சேவூர் பகுதியில் விதிகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2. திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார் படுத்தும் பணி தீவிரம் பஸ் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூரில் அரசு பஸ்களை இயக்க தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
3. தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் நேற்று பணி புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
4. சேலம் மாவட்டத்தில் 186 மதுக்கடைகள் இன்று திறப்பு டோக்கன் முறையில் மது வழங்க நடவடிக்கை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் 186 மதுக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. மதுப்பிரியர்களுக்கு டோக்கன் முறையில் மது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5. நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மனு; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் கொடுத்த மனுக்கள்மீது விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.