கேரளாவுக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
கேரளாவுக்கு நூதன முறையில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினி டெம்போ உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
தூத்துக்குடியில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மினி டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு அஜய்குமார் மற்றும் போலீசார் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்ட பதிவு எண் கொண்ட ஒரு மினி டெம்போ வந்தது.
நூதன முறையில் கடத்தல்
அதனை போலீசார் வழிமறித்து நிறுத்தினர். அதில் கழிவு அட்டைகள் இருந்தது. போலீசார் அந்த கழிவு அட்டைகளை அகற்ற சொல்லி சோதனை செய்தபோது அதற்குள் 15 சிறு, சிறு சாக்கு மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சாக்கு மூடைகளை அவிழ்த்து பார்த்தபோது அதற்குள் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு மூடையிலும் தலா 50 கிலோ வீதம் 15 மூடைகளிலும் 750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய மினி டெம்போ டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமாரையும் (வயது 27), டெம்போ உரிமையாளரான தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிச்செல்வத்தையும் (30) போலீசார் கைது செய்தனர். மினி டெம்போவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொழிலாக....
விசாரணையில், ரேஷன் அரிசியை தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலத்துக்கு கடத்தி வெளிச்சந்தையில் கிலோ ரூ.20, ரூ.25-க்கு விற்பனை செய்து வந்ததும், மினி டெம்போ உரிமையாளர் மாரிச்செல்வம் ரேஷன் அரிசி கடத்துவதை தொழிலாக செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் மீது ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு லாரியில் 9 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story