காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் உண்ணாவிரத போராட்டம்
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருந்தாளுனர்கள் நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தின் கன்னியாகுமரி மண்டலம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர் பணிநேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்று ஏற்கனவே வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதை கைவிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ விதியின்படி கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
உண்ணாவிரத போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர்கள் டைட்டஸ் (குமரி), ஆனந்தகுமார் (நெல்லை), ரமேஷ் (தூத்துக்குடி), நவாஸ்கான் (தென்காசி) ஆகியோர் தலைமை தாங்கினர். குமரி மாவட்ட அமைப்பு செயலாளர் போபி வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மைக்கேல் லில்லி புஷ்பம் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.
பணிகள் பாதிப்பு
அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர்கள் சுப்பையா (குமரி), பாஸ்கரன் (நெல்லை), நயினார் (தூத்துக்குடி), குமார் (தென்காசி) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில செயலாளர் ஞானப்பிரகாசம் சிறப்புரையாற்றினார். சாதிக் முகமது உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜான் சுதாகர் நன்றி கூறினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தால் அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்துக்கிடங்கு ஆகியவற்றில் மருந்து, மாத்திரைகள் வினியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story