வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வடுவூரில் நடந்தது


வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வடுவூரில் நடந்தது
x
தினத்தந்தி 31 Aug 2019 11:00 PM GMT (Updated: 31 Aug 2019 6:43 PM GMT)

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி வடுவூரில் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடுவூர்,

திருவாரூர் மாவட்டம், வடுவூர் வடவாறு விரிவாக்க கால்வாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு 6 நாட்களில் இந்த வாய்க்காலில் தண்ணீர் வந்துவிடும். இந்த நிலையில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 18 நாட்கள் ஆகியும், இதுவரை இந்த வாய்க்காலுக்கு தண்ணீர் வரவில்லை. தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகள் நடைபெறுவதால் சில பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க இயலவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வடுவூர் புதுக்கோட்டை பகுதியில் உள்ள வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வடவாறு விரிவாக்க கால்வாயில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நெற்பயிர்கள் காய்ந்து வருவதாகவும், உடனடியாக வடவாறு விரிவாக்க கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்டு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story