வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்


வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

வீட இல்லாதவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கொரடாச்சேரி,

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த முகாம்களில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறேன். இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 573 வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 394 வருவாய் கிராமங்களில் முகாம் நடத்தப்பட்டு 22,523 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள கிராமங்களிலும் உடனடியாக முகாம் நடத்தப்படும்.

இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து ஆய்வு நடத்தி 1 மாதத்திற்குள் தீர்வினை ஏற்படுத்துவார்கள். முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் சுமார் 50 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உரிய ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன.

1 லட்சம் கான்கிரீட் வீடுகள்

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் குடியிருப்பு நிலம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக அரசின் இடங்கள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக 30 ஆயிரம் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல் வீடு இல்லாதவர் களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப் படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story