மாவட்ட செய்திகள்

நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு + "||" + Judges and attorneys are the two eyes of the law District Principal Session Judge Speech

நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு

நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு
நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு.
பெரம்பலூர்,

தேசிய, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிக்காட்டுதலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவில், கிரிமினல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனித உரிமை, அமில வீச்சு, போக்சோ சட்டம், மூத்தோர் குடிமக்கள் சட்டம் மற்றும் அனைத்து வகை சட்டங்கள் உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது.


இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், நீதிபதிகளும், வக்கீல்களும் சட்டத்தின் இரு கண்கள் ஆவார்கள். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் நிலைமையை அறிந்து நீதிபதிகள் மருத்துவமனை, சிறைச்சாலை ஆகியவற்றிற்கு நேரில் சென்று உத்தரவிட சட்டத்தில் வழி உள்ளது. நீதிபதிகள் அனைத்து கிராமங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளை வக்கீல்கள் மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் ஆகியோர் உதவியுடன் எடுத்துரைக்க வேண்டும்.

அப்போது தான் அடித்தட்டில் உள்ள மக்களுக்கும் நீதி கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார். மேலும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி லிங்கேஸ்வரன், மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி மலர்விழி, பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கிரி மற்றும் சார்பு நீதிபதி வினோதா ஆகியோர் நீதிபதிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தனர். பயிற்சியில் நீதித்துறை நடுவர்கள் அசோக்பிரசாத், கருப்புசாமி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், பயிற்சி நீதித்துறை நடுவர் செந்தில்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்’ பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேச்சு
“இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடுவார்கள்” என்று நெய்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
2. நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு கருத்தரங்கில் அமைச்சர் பேச்சு
நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு மத்திய அரசை குறை சொல்வது தவறு என்று நாகர்கோவிலில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
3. விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற மாணவர்கள் பாடுபட வேண்டும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேச்சு
விவேகானந்தரின் கனவை நிறைவேற்ற மாணவர்கள் பாடுபட வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.
4. வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; புதுச்சேரி முதல் அமைச்சர் பேச்சு
வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.
5. நாடு முழுவதிலும் இருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம்; அமித் ஷா பரபரப்பு பேச்சு
நாடு முழுவதிலும் இருந்து அனைத்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம் என மத்திய மந்திரி அமித் ஷா பேசியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...