வெள்ளியணை பகுதியில் குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வெள்ளியணை பகுதியில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாவது குறித்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியணை,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கரூர் மாவட்டம் கட்டளை பகுதியில் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து அதிலிருந்து குழாய் மூலம் உப்பிடமங்கலம், ஜெகதாபி, வெள்ளியணை, பாளையம் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் இந்த குழாயில் வெள்ளியணை அருகே ஜெகதாபி செல்லும் சாலையில் காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது .
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதேபோல் ஜெகதாபி பகுதியில் வெள்ளியணை பிரிவு சாலை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் கிடைக்காத நிலையில் காவிரி குடிநீர் மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் குழாய்கள் உடைப்பால் காவிரிநீர் வீணாகசெல்வது பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இதனை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story