சென்னை எழும்பூரில் கபடி வீரர்கள் - பஸ் ஊழியர்கள் அடிதடி மோதல்; பஸ்களை நடுரோட்டில் நிறுத்தியதால் பரபரப்பு
சென்னை எழும்பூரில் பஸ் ஊழியர்கள்- கபடி வீரர்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டது. பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கபடி வீரர்கள் 20 பேர் புதுச்சேரியில் நடந்த கபடி போட்டியில் கலந்துகொண்டனர். கபடி போட்டிகள் முடிந்த உடன் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கபடி வீரர்கள் 20 பேரும், நேற்று முன்தினம் சென்னை வந்தனர். சென்னையில் தங்கியிருந்து பல்வேறு இடங்களை அவர்கள் நேற்று சுற்றி பார்த்தனர்.
மெரினா கடற்கரைக்கும் அவர்கள் சென்றனர். நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கபடி வீரர்கள் 20 பேரும் மாநகர பஸ் ஒன்றில் (வழித்தடம் எண் ‘29ஏ’) ஏறினார்கள். கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்துக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். பஸ்சில் ஏறிய கபடி வீரர்களை டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் வில்சன் கேட்டுக்கொண்டார்.
கபடி வீரர்கள் டிக்கெட் எடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதையொட்டி வில்சனுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ் எழும்பூர் ரெயில் நிலையம் எதிரே வந்தபோது கபடி வீரர்களுக்கும், வில்சனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாக பஸ் நடுரோட்டில் அப்படியே நிறுத்தப்பட்டது. கபடி வீரர்கள் வில்சனை தாக்கியதை கேள்விப்பட்டதும், அந்த வழியாக வந்த மற்ற மாநகர பஸ்களும் நடுரோட்டில் நிறுத்தப்பட்டன.
வில்சனுக்கு ஆதரவாக மற்ற பஸ்களின் கண்டக்டர்கள், டிரைவர்களும் திரண்டு வந்தனர். அவர்கள் கபடி வீரர்களை தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு கபடி வீரர்களும் தாக்க எழும்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக கபடி வீரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு போர்க்களம் போன்ற ஒரு காட்சி காணப்பட்டது. பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்த உடன் எழும்பூர் போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையில் போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார்கள். வில்சனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையிலும் பஸ்களை இயக்கமாட்டோம் என்று பஸ் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
இதைத்தொடர்ந்து வில்சனை தாக்கியதாக லட்சுமணன் உள்பட 4 கபடி வீரர்களை போலீசார் பிடித்துச்சென்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் வாக்குறுதி அளித்தனர். அதன்பிறகு பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினார்கள். கபடி வீரர்கள் 4 பேரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணை முடிவுக்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story