மாவட்ட செய்திகள்

தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை + "||" + At the Theni bus station, Dindigul grandmother 32 pounds of jewelry theft

தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை

தேனி பஸ் நிலையத்தில், திண்டுக்கல் மூதாட்டியிடம் 32 பவுன் நகைகள் திருட்டு - மர்ம நபர் கைவரிசை
தேனி பஸ் நிலையத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த மூதாட்டியிடம் 32 பவுன் நகைகளை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி,

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பூஞ்சோலை பாரதிநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 65). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக பழனிசெட்டிபட்டியில் இருந்து புறப்பட்டு தேனியில் உள்ள கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திண்டுக்கல் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்தார்.

வீட்டில் இருந்து வரும் போது அவர் தனது 32 பவுன் நகைகளை ஒரு மஞ்சள் பையில் வைத்து அதை மற்றொரு பைக்குள் வைத்து எடுத்து வந்தார். பஸ்நிலையத்தில் பஸ்சில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் தான் கொண்டு வந்த பையை பார்த்தபோது நகைகள் வைத்து இருந்த மஞ்சள் பையை காணவில்லை.

யாரோ மர்ம நபர், மஞ்சள் பையோடு 32 பவுன் நகைகளையும் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு தொடர்பாக பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு அருகே, லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 16 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. தாராபுரத்தில், நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு, மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
தாராபுரத்தில் பட்டப்பகலில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. வேலூரில் முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
வேலூரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
4. ஓடும் ரெயிலில், மூதாட்டியை தூங்க விடாமல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
ஓடும் ரெயிலில் மூதாட்டியை தூங்க விடாமல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
5. திருவாரூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பிணமாக மீட்பு
திருவாரூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்குள் இதுவரை 6 பேர் ஆற்றில் மூழ்கி இறந்ததால் மக்கள் சோகத்தில் உள்ளனர்.