மாவட்ட செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + 1,585 people were charged in Salem overnight violating traffic rules

போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு

போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு
போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,

சேலத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.


அதன்பேரில், நேற்று முன்தினம் மாநகரின் பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 331 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 16 பேர், இருசக்கர வாகனங்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 681 பேர் உள்பட மொத்தம் 1,585 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் விபத்துகளை குறைக்க போலீசாரின் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,898 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
2. கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன
கோவை மாவட்டம் முழுவதும் 1,509 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
3. வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது
விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூர் மாவட்டத்தில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
4. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் துணைவேந்தர் பிச்சுமணி வழங்கினார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயின்ற 1,252 மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தர் பிச்சுமணி பட்டம் வழங்கினார்.
5. மராட்டிய மாநிலத்தில் கனமழை: தண்டவாளம் மூழ்கியதால் “1,000 பேருடன் வெள்ளத்தில் சிக்கிய ரெயில் ” பல மணி நேரம் தவித்த பயணிகள் படகுகள் மூலம் மீட்பு
மராட்டிய மாநிலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, மும்பை அருகே தண்டவாளம் மூழ்கியதால், ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. ரெயிலில் பல மணி நேரம் தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை