ப.சிதம்பரம் கைதை கண்டித்து உண்ணாவிரதம் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு பங்கேற்பு
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய அன்னை சோனியா காந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சென்னை,
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.யசோதா தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரத போரா ட்டத்தின் போது கே.வி. தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
ப.சிதம்பரம் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பழிவாங்கும் நோக்கத்தோடும், காங்கிரஸ் தலைமை மீது தவறான எண்ணத்தை உருவாக்க மத்திய பா.ஜ.க. அரசின் கைது நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது. பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது அதனை மறைக்க சூழ்ச்சியின் ஒரு பகுதி தான் ப.சிதம்பரம் கைது நடவடிக்கை.
இதன்மூலம் தவறுகளை மறைத்து, மக்கள் மன்றத்தில் தாங்கள் நல்லவர்கள் என காட்ட பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால் அது வெற்றி பெறாது. பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, விவசாயி தற்கொலை உள்ளிட்டவைகளால் நாடு பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story