வேலை வாய்ப்பற்றோர், மாநில தொழில் நெறி வழிகாட்டு மையத்தை அணுகலாம் கலெக்டர் தகவல்


வேலை வாய்ப்பற்றோர், மாநில தொழில் நெறி வழிகாட்டு மையத்தை அணுகலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:15 AM IST (Updated: 15 Sept 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்றோர், மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அணுகலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

அனைத்து மாவட்டத்திலும் உள்ள வேலை வாய்ப்பற்றோர் மற்றும் இளைஞர்கள் தங்களுக்கு உரிய பொருத்தமான தொழில் நெறியை தேர்வு செய்ய உதவிடும் வண்ணம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் கீழ் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் என்னும் புதிய அலுவலகம் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த அலுவலகமானது உள அளவை சோதனைகள், போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வேலை வாய்ப்பு முகாம்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென பிரத்யேக ஆலோசகர்கள் மற்றும் உயர்ரக வசதிகளை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் கொண்டுள்ளது.

வேலை வாய்ப்பற்றோர்

இச்சேவைகளை பெற விருப்பமுடைய வேலை வாய்ப்பற்றோர் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், டான்சி அலுவலகம் முதல் தளம், கிண்டி காவல் நிலையம் அருகில், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை என்ற முகவரியில் அனைத்து அலுவலக நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இம்மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story