சாமல்பட்டி, ஓசூரில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை
சாமல்பட்டி, ஓசூரில் பள்ளி மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சாதனா (வயது 13). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாணவி சாதனா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவளை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி சாதனா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் சிப்காட் ராஜாஜி நகரை சேர்ந்தவர் தேவேந்திரா. தொழிலாளி. இவருடைய மனைவி சகிலி தர்பானா (28). இவர்களுக்குள் குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சகிலி தர்பானா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சகிலி தர்பானாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story