மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
மத்திய, மாநில அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஆட்டோ மொபைல் தொழிலை பாதுகாக்க வேண்டும். ஷேல் கியாஸ், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் நிலையத்தை அடைந்தனர். பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் முகமதுசலாவுதீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலா கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாவட்ட பொருளாளர். இளங்கோவன், மாவட்ட துணைத்தலைவர் சுந்தரய்யா, துணை செயலாளர் வேலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story