கல்வி அதிகாரி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
குழித்துறையில் கல்வி அதிகாரி வீட்டில் 35 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் குழித்துறை இடைத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணசாமி (வயது 50). இவர் திருச்செந்தூரில் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் அங்கேயே தங்கியுள்ளார். இவருடைய மனைவி வானதி. இவர் திருவனந்தபுரத்தில் அரசு கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் சென்னையில் தங்கியிருந்து கல்லூரியில் படிக்கிறார். குழித்துறையில் உள்ள வீட்டில் வானதி மட்டுமே தங்கியிருந்தார்.
இவர் கடந்த 9-ந் தேதி மகளை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்றார். இதனால், கடந்த சில நாட்களாக வீடு பூட்டிய நிலையிலேயே கிடந்தது. நேற்று லட்சுமணசாமி குழித்துறையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கொள்ளை
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story