மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை - வலங்கைமான் அருகே பரிதாபம் + "||" + In desperation to repay the debt Woman committing suicide after eating rat drug

கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை - வலங்கைமான் அருகே பரிதாபம்

கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை - வலங்கைமான் அருகே பரிதாபம்
வலங்கைமான் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில், எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சிமிலி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி சித்ரா(வயது 35). சம்பவத்தன்று சித்ரா வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பல்வேறு மகளிர் சுயஉதவி குழுக்களிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத விரக்தியில் சித்ரா, எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தீக்குளித்து பெண் தற்கொலை: ஸ்டூடியோ அதிபர் கைது
உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததால் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக ஸ்டூடியோ உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
2. குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் தூக்கமாத்திரைகளை தின்று பெண் தற்கொலை
குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று கணவன்-மனைவி தற்கொலைக்கு முயன்றனர். அத்துடன் விஷமும் குடித்ததால் பெண் பரிதாபமாக இறந்தார்.
3. ரூ.13 ஆயிரத்து 260 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.13 ஆயிரத்து 260 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.
4. காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை; கோவிலுக்கு கணவர் வர மறுத்ததால் விபரீத முடிவு
வெள்ளகோவில் அருகே கோவிலுக்கு கணவர் வரமறுத்ததால் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. 837 பேருக்கு ரூ.42 கோடி கடன் வங்கி வாடிக்கையாளர் முகாமில் வழங்கப்பட்டது
நாகர்கோவிலில் நடந்த வங்கி வாடிக்கையாளர் சிறப்பு முகாமில் 837 பேருக்கு ரூ.42 கோடி கடன் வழங்கப்பட்டது.