சட்டசபை தேர்தல்: சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேட்டி


சட்டசபை தேர்தல்: சிவசேனாவுடன் தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேட்டி
x
தினத்தந்தி 17 Sept 2019 3:17 AM IST (Updated: 17 Sept 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவுடன் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன.

இவ்விரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தநிலையில், தனது 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘மகாஜனதேஷ்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சத்தாராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவசேனாவுடன் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்காக சிலரை தவிர பல காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

மத்திய அரசின் இந்த முடிவை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? என்பதை பிரிதிவிராஜ் சவானிடம் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story