ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில், காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் திலகர் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் முருகன், நடராஜன், வட்டார தலைவர்கள் சீத்தாராமன், ராமச்சந்திரன், ரமேஷ் ரெட்டியார், குணசேகரன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றினார்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், மணி, வேல்முருகன், மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், ஓவியர் ரமேஷ், ரவிக்குமார், ராஜேஷ், கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் கவுன்சிலர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story