கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் தர்ணா


கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் தர்ணா
x
தினத்தந்தி 18 Sept 2019 4:15 AM IST (Updated: 18 Sept 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டுப்பாறை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தண்ணீர் கிடைக்கவில்லை.

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டுப்பாறை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் அதில் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து ஆட்டுப்பாறை கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து நேற்று ஆட்டுப்பாறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஒன்றிய ஆணையாளர் திருப்பதிவாசகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆட்டுப்பாறை கிராமத்திற்கு மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீரை சேமித்து வைக்க வசதியாக ஆட்டுப்பாறை கிராமத்தில் புதிய மேல்நிலைக்குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story