‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு: தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை


‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு: தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 9:34 PM GMT)

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக் கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், பூட்டிய அறைக்குள் போலீசார் 2½ மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

தேனி, 

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா. இவர் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட் டம் செய்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், கடந்த 18-ந்தேதி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கு குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்த னர். அதன்படி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில், க.விலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேற்று மாலை 5 மணிக்கு வந்தனர்.

பின்னர் கல்லூரி முதல்வர் அறையில் வைத்து ராஜேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாலை 5.15 மணிக்கு இந்த விசாரணை தொடங்கியது. மேலும் விசாரணையில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த அறையின் கதவும் பூட்டப்பட்டுவிட்டது. பின்னர் இரவு 7.45 மணிக்கு விசாரணை நிறைவடைந்தது. 2½ மணி நேர விசாரணையை முடித்துக் கொண்டு போலீசார் வெளியே வந்தனர். அப்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் எங்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தார் என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட் டார். பின்னர் இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எத்தனை மாணவ- மாணவிகள் நடப்பு ஆண்டில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். மாணவர் உதித்சூர்யாவை மருத்துவ படிப்புக்கு தேர்வு செய்த குழுவில் யாரெல்லாம் இடம் பெற்று இருந்தார்கள்?, ஆள்மாறாட்டம் தொடர்பான புகார் எப்போது வந்தது? அது தொடர்பாக விசாரணை நடத்திய குழுவில் இடம் பெற்றவர்கள் யார்? என்பது போன்ற பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டன. அதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டுள்ளது என்றார்.

இதுமட்டுமின்றி, கல்லூரி முதல்வர் அறையில் இருந்து சில முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அடுத்தக்கட்டமாக ஆள்மாறாட்ட புகார் குறித்து மாணவரிடம் விசாரணை நடத்திய குழுவினரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Next Story