மு.க.ஸ்டாலின்- உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை வருகை


மு.க.ஸ்டாலின்- உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை வருகை
x
தினத்தந்தி 22 Sept 2019 5:00 AM IST (Updated: 22 Sept 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவை வருகிறார்கள்.

கோவை,

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்நா.கார்த்திக்எம்.எல்.ஏ., வடக்குமாவட்ட செயலாளர்சி.ஆர்.ராமச்சந்திரன், தெற்குமாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின்இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30மணிக்கு கோவைவருகிறார். அவரை வரவேற்கஅனைத்து மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழகநிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட அனைவரும் திரளாக பங்கேற்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

நா.கார்த்திக்எம்.எல்.ஏ.வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவைடாடாபாத்அருகில் உள்ளகிஸ்கால்கிராண்ட் ஓட்டலில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் தி.மு.க. இளைஞர்அணி செயலாளர்உதயநிதிஸ்டாலின் பங்கேற்கிறார். மாலை 5.30மணிக்கு பீளமேடுஆரோக்கியசாமிதிடலில் (ரொட்டிக்கடைமைதானம்) தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாமைஉதயநிதிஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், புதியதாக இளைஞர் அணிஉறுப்பினராக பதிவுசெய்ய விரும்புபவர்கள், இளைஞர் அணியினர்பெருந்திரளாக பங்கேற்குமாறுகேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story