தென்மும்பை பகுதியில் 2 நாட்கள் குடிநீர் வெட்டு மாநகராட்சி அறிவிப்பு
தென்மும்பை பகுதியில் வருகிற 25, 26-ம் தேதிகளில் குடிநீர் வெட்டு இருக்கும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை,
தென்மும்பை பகுதியில் உள்ள பண்டர்வாடா நீர் தேக்கத்தில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதி மாநகராட்சி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த பணிகள் 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி 26-ந் தேதி (வியாழன்) காலை 10 மணிக்கு முடிகிறது. இந்த பணிகளையொட்டி தென்மும்பை பகுதிக்கு மேற்கண்ட 2 நாட்கள் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும்.
தென்மும்பை பகுதிகள்..
இதில் 25-ந் தேதி நேவல் டக்யார்டு, பி.டி.மெல்லா ரோடு, சந்த் துக்காரம் ரோடு, பிரன்க் ரோடு, கேசவ்ஜி நாயக் ரோடு, பி.பி.டி., டக்யார்டு ரோடு, கன்பவுடர் ரோடு, கார்பென்டர் ரோடு, நவாப் டேங் ரோடு, ராம்சந்திர பாத் மார்க், ஜே.ஜே. ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.
26-ந் தேதி டோங்கிரி ரோடு, யுசுப் மெகர்அலி ரோடு, ஜகேரியா மஸ்ஜித்தெரு, முகமதுஅலி ரோடு, பைதோனி, மதன்புரா, என்.எம். ஜோஷி மார்க், கஸ்துர்பா ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story