அதிராம்பட்டினத்தில் சூறைக்காற்று: 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


அதிராம்பட்டினத்தில் சூறைக்காற்று: 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 8:43 PM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினத்தில் சூறைக்காற்று வீசியதால் 5 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம், 

தஞ்சை  மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம், கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம்  உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் நாட்டுப்படகு  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தொடர்ந்து மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். 

மேலும் அதிராம்பட்டினம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் மின்வினியோகம் தடை செய்யப்பட்டது.

Next Story