தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 22 Sep 2019 10:30 PM GMT (Updated: 22 Sep 2019 7:33 PM GMT)

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தா.பழூர் கிழக்கு ஒன்றியம் வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம் ஆகிய ஊராட்சிகளில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கு இணங்க இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமை மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் தனபால், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் ராமதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story