காதல் திருமணம் செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த  கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு  தற்கொலை
x
தினத்தந்தி 23 Sept 2019 3:45 AM IST (Updated: 23 Sept 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வேளச்சேரி , காதல் திருமணம் செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(வயது 34). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 33 வயது பெண்ணை, வெங்கட்ராமன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வேளச்சேரி ஜெகநாதபுரத்தில் உள்ள இந்த வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வெங்கட்ராமன், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அவருடைய காதல் மனைவி, தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கட்ராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வெங்கட்ராமனின் காதல் மனைவியிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story