மின்துறையில் காலி பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தல்

மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.
சிவகங்கை,
சிவகங்கையில் மின்ஊழியர் சம்மேளனம் கொடியேற்று விழா மற்றும் சிறப்பு கூட்டம் திட்ட தலைவர் சாத்தையா தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் சேக்கிழார் கொடியேற்றினார். கூட்டத்தில் மாநில தலைவர் மணிகண்டன், துணை தலைவர்கள் அய்யாத்துரை, சுப்பிரமணியன், ஜோசப், பொருளாளர் லூர்து பாஸ்டின்ராஜ், செயலாளர்கள் ராஜாங்கம், மூக்கையா, மதுரை மண்டல செயலாளர் ஷாஜஹான், பொருளாளர் நாகப்பன், துணை தலைவர்கள் வீரபாண்டியன், செந்தில்குமார், இணை செயலாளர்கள் உத்திரராஜ், மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மின்ஊழியர் சம்மேளனம் மாநில பொது செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:- மின்துறையில் 40 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும். மேலும் மின்வாரியத்தில் ஏற்கனவே பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
கடந்த 2007-ம் ஆண்டுக்கு பின்பு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யவில்லை. இதை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி சென்னை தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
ஓய்வு பெறுவோருக்கு பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை. மின்வாரியத்தில் புதிய பணியிடங்களை அனுமதிக்கும் உத்தரவை இதுவரை செயல்படுத்தவில்லை. 2019 டிசம்பர் முதல் புதிய சம்பள உயர்வு தர வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் அமைப்பு செயலாளர் மாதவன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story