நள்ளிரவில் காண்டிராக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கார்-மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் சேதம்
மன்னார்குடியில், நள்ளிரவில் காண்டிராக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் சேதம் அடைந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி-தஞ்சை சாலையில் நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 57). கட்டிட காண்டிராக்டரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வெடி வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக விழித்துக்கொண்ட நடராஜன் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது வாசலில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவை தீப்பிடித்து எரிவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காரின் பின்பகுதியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் ஸ்கூட்டரின் பெரும்பகுதி சேதம் அடைந்தது. மோட்டார் சைக்கிள் மற்றும் காரின் பின்பகுதி சேதம் அடைந்தது.
பெட்ரோல் குண்டுகள்
இதுகுறித்து நடராஜன் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது நடராஜன் வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு அருகில் உள்ள சந்து பகுதியில் 2 பாட்டில்கள் காலியாக கிடந்தன. அந்த பாட்டில்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மர்மநபர்கள் சந்துப்பகுதியில் இருந்து பெட்ரோல் குண்டுகளை காண்டிராக்டர் வீட்டில் வீசி தாக்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது. தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் காண்டிராக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story