சேலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு


சேலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 23 Sep 2019 10:02 PM GMT (Updated: 23 Sep 2019 10:02 PM GMT)

சேலத்தில் அரசு ஆஸ்பத்திரியில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. மற்றும் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவிற்கு சென்ற அவர்கள் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். இதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள நோயாளிகள், எலிகள் தொல்லை அதிக அளவில் இருப்பதாகவும், லிப்ட்கள் சரியாக வேலை செய்யாததால் 3 மாடிக்கும் படியில் நடந்தே செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும், கூறினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசு ஆஸ்பத்திரி டீன் திருமால் பாபுவிடம் எம்.பி., எம்.எல்.ஏ. தெரிவித்தனர். இந்த ஆய்வின் போது டாக்டர்கள், தி.மு.க. கட்சியினர் உடனிருந்தனர்.


Next Story