காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்


காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 Sept 2019 4:30 AM IST (Updated: 26 Sept 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மன்னார்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னார்குடி,

மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் முன்னிலை வகித்தார். முன்னதாக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் வரவேற்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வல்லபிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.

கல்விக்கடன்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை முடித்து தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தேசிய மற்றும் தனியார் வங்கிகள் எந்தவித கெடுபிடியும் இல்லாமல் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மரகதவள்ளி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட பொதுச்செயலாளர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மன்னார்குடி மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Next Story