திருவரங்குளம் பகுதியில் தொடர் திருட்டு பொதுமக்கள் அச்சம்
திருவரங்குளம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவரங்குளம்,
திருவரங்குளம் யூனியன் சாலையில் வசித்து வருபவர் ஆனந்தி (வயது 48). இவரது கணவர் நாகராஜ் இறந்து விட்டார். ஆனந்தியின் மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். ஆனந்தி தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 28 ஆயிரத்தை கடனாக பெற்று உள்ளார். அதனை வீட்டில் உள்ள பீரோவில் வைத்துவிட்டு அறந்தாங்கி அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.28 ஆயிரம், வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். அந்த வீட்டின் மாடியில் குடியிருந்து வரும் புஷ்பராணி என்பவர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஆனந்தி வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. பின்னர் புஷ்பராணி வீட்டு மாடிக்கு சென்று பார்த்த போது அங்கும் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திருவரங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கோரிக்கை
திருவரங்குளம் கடைவீதியில் மளிகை கடை நடத்தி வரும் பாலு கடையிலும், அரிசி உள்ளிட்ட பொருட்களும், பிடாரி அம்மன் கோவில் அருகில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ராஜீவ் காந்தி கம்ப்யூட்டர் சென்டரிலும், கல்லா பெட்டியில் இருந்த ரூ.2,500-த்தையும், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றையும் திருடிச் சென்று உள்ளனர். அருகில் உள்ள பெட்டிக்கடையை உடைத்து அங்கிருந்த பொருட்களையும் அள்ளிச்சென்றுள்ளனர். மேலும் அதன் அருகில் இருந்த வீட்டின் கதவும், அதன் பின்புறம் உள்ள ஒரு வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு பணம் மற்றும் பொருட்கள் இல்லாததால் திரும்பி சென்று உள்ளனர். இப்பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவரங்குளம் பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்றது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story