மீன்கள் செத்து மிதந்ததால் சுண்ணாம்பாற்றில் அதிகாரிகள் ஆய்வு
சுண்ணாம்பாற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் தண்ணீர் பச்சை மற்றும் செம்மண் நிறமாக மாறி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியது. ஆற்றில் மருத்துவ கழிவு, ரசாயன கழிவு, கழிவறை நீர் ஆகியவை கலப்பதால் மாசு ஏற்பட்டு அந்த பாதிப்பால் மீன்கள், நண்டு செத்து மிதந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுண்ணாம்பாற்றில் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதுபற்றி அறிந்ததும் அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் துறை பொறியாளர் ரமேஷ், அறிவியல் தொழில்நுட்ப துறை இயக்குனர் சுமித்தா, அறிவியல் விஞ்ஞானி விபின்பாபு ஆகியோர் நேற்று காலை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றுக்கு வந்தனர். சென்னை, சிதம்பரம் பகுதியில் உள்ள கடல்நீர் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் தண்ணீரையும், செத்துக் கிடந்த மீன்களையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த ஆய்வின் முடிவில் தண்ணீர் மாசு, மீன்கள் செத்துக் கிடந்ததற்கான காரணம் குறித்து தெரியவரும்.

Related Tags :
Next Story