நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அமைச்சர் காமராஜ் பேட்டி


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 28 Sep 2019 11:00 PM GMT (Updated: 28 Sep 2019 6:34 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

நன்னிலம்,

நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் பிரதம மந்திரி ஜன்ஆரோக்கியா யோஜனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். குடும்ப நலத்துறை மருத்துவ இணை இயக்குனர் உமா வரவேற்றார். முகாமை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த மருத்துவ முகாமில் 1,027 நோய்களை கண்டறிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 154 நோய்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 38 வகையான அரியவகை நோய்கள் கண்டு பிடிக்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை நீங்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் முன்னாள் எம்.பி. கோபால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பு, கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால், ஒன்றிய ஆணையர்கள் திருநாவுக்கரசு, கார்த்திகேயன், நன்னிலம் பேரூராட்சி செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. மேலும் உணவு பொருட்கள் 3 மாதங்களுக்கு தேவையானவை கையிருப்பு உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story