ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தேர்தலில் எங்களது வெற்றியை தடுத்தார்கள் - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தேர்தலில் எங்களது வெற்றியை தடுத்தார்கள் என்று டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டினார்.
சூலூர்,
அ.ம.மு.க.கோவை மாவட்ட கழகநிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்சூலூர்கணியூரில்உள்ள தனியார்மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில்அ.ம.மு.க.பொதுச்செயலாளர்டி.டி.வி. தினகரன்தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில்பல தேர்தல்களில்பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. நடந்து முடிந்தநாடாளுமன்ற தேர்தலில்நமது கட்சி எதனால் தோற்றது என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது வெற்றியை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தடுத்தார்கள் என்பதுமக்களுக்கு தெரியும்.
பல தேர்தல்களில், கருணாநிதியின்அச்சுறுத்தலை தாண்டி கட்சியைவெற்றிகரமாகவழிநடத்தி சென்றவர்ஜெயலலிதா. அவரதுஆசிபெற்றஎங்களுக்கு, இப்போதுள்ள எதிராளிகளைஎதிர் கொள்வதுசாதாரணமானது. இந்த தேர்தல்தோல்வி தற்காலிகமானது. ஒருகாலத்தில் ஜெயலலிதாவே தேர்தலில் தோற்று, பின்னர் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். நம்முடைய கட்சியில் இருந்து கொண்டு வெளியே சென்றவர்கள் கொள்கை இல்லாத கட்சி என்கிறார்கள். அப்படி என்றால் கொள்கை இல்லாத கட்சியில் எதற்காக இவ்வளவு நாட்கள்கொள்கை பரப்புசெயலாளர்பதவியில் இருந்தார்கள்.
நீங்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் இவ்வாறு பேசுகிறீர்கள் என்று தெரியும். தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைவரும், யாரால் அமைச்சர் ஆக்கப்பட்டனர் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தில்உள்ள ஒவ்வொருவருடைய செயல்பாடுகளையும் நான்உற்று கவனித்துவருகிறேன். கட்சிக்குஎதிராக செயல்படும்நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா,எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்குடி.டி.வி.தினகரன்மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார்.இந்த கூட்டத்தில், கோவைமண்டல பொறுப்பாளரும்அமைப்பு செயலாளருமானசேலஞ்சர் துரை,மாநில சிறுபான்மைபிரிவு செயலாளர்தம்பி இஸ்மாயில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுகுமார், கோவை வடக்குமாவட்ட செயலாளர்அலாவுதீன், நீலகிரிமாவட்ட செயலாளர்கலையரசன், முன்னாள் அமைச்சர் சண்முகவேலு,கொள்கை பரப்புசெயலாளர்சி.ஆர்.சரஸ்வதிமற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story