திண்டுக்கல்லில், சின்னவெங்காயம் கிலோ ரூ.40 க்கு விற்பனை


திண்டுக்கல்லில், சின்னவெங்காயம் கிலோ ரூ.40 க்கு விற்பனை
x
தினத்தந்தி 1 Oct 2019 3:30 AM IST (Updated: 30 Sept 2019 7:47 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சின்னவெங்காயம் கிலோ ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முருகபவனம், 

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு, வடக்கு ரதவீதி, பழனி–பைபாஸ் பகுதிகளில் தரகுமண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தரகுமண்டிகளுக்கு சுற்று வட்டாரம், தேனி, திருப்பூர் பகுதிகளில் இருந்து சின்னவெங்காயமும், கர்நாடகா, ஆந்திரா மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து பல்லாரியும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட் நாளில் விற்பனைக்கு வரும் வெங்காயத்தின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது சின்னவெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரையிலும், பல்லாரி கிலோ ரூ.26 முதல் ரூ.42 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் சின்னவெங்காயத்தின் வரத்தும், வடமாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வரும் பல்லாரியின் வரத்தும் குறைந்துள்ளது. அதனால் அதன் விலை அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களில் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சின்னவெங்காயம், பல்லாரி விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Next Story