மாவட்ட செய்திகள்

பூதலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: முதியவர் பலி; மகன் படுகாயம் டிரைவர் கைது + "||" + Truck collision on Poothalur: Older man killed Son arrested for fatal injury

பூதலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: முதியவர் பலி; மகன் படுகாயம் டிரைவர் கைது

பூதலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: முதியவர் பலி; மகன் படுகாயம் டிரைவர் கைது
பூதலூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியானார். மேலும் அவர் மகன் படுகாயம் அடைந்தார்.
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை அருகே பூதலூர் பெரியார் புரம் பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் அமானுல்லா(வயது60). இவர் குடும்பத்துடன் பூதலூர் ஜோதி நகரில் வசித்து வந்தார். இவருடைய மகன் முகமது மன்சூர்(21). அவர்கள் 2 பேரும் கடைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து விட்டு மீண்டும் பூதலூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.


மோட்டார் சைக்கிளை முகமது மன்சூர் ஓட்டி சென்றார். அமானுல்லா பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து பாரி காலனி பகுதியில் வந்தபோது செங்கிப்பட்டியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

முதியவர் சாவு

இதில் தந்தை, மகன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் அமானுல்லா உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முகமது மன்சூர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரே‌‌ஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செங்கிப்பட்டியை சேர்ந்த முருகேசன்(50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய தாய், மகன் கைது
வளசரவாக்கத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தாய், மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
2. ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கூலித்தொழிலாளி கைது
ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3. சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம்: தந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயி கைது
சொத்தை பிரித்து தராததால் ஆத்திரம் அடைந்து தந்தை, தங்கையை கொலை செய்ய முயன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
4. திருமானூர் அருகே மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது
திருமானூர் அருகே மகளிடம் தகராறு செய்ததால், தனது மாமனாரை அடித்துக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
5. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.