10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் அப்பாராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், மாவட்ட இணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட செயலாளர் முனியன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் குருசந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
10 அம்ச கோரிக்கைகள்
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவதை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவ படியை ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் அனைவருக்கும் வழங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தை அரசு நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story