கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் ஓய்வூதியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெறும் நாளில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள் நம்பிராஜ், ராமலிங்கம், சிவராமகிருஷ்ணன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்டார தலைவர் தேவ சமாதானம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பாண்டியன், அந்தோணி குழந்தை, வேல் கனி, இசக்கியம்மாள், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story