தண்டவாளம் பராமரிப்பு பணியால் திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து


தண்டவாளம் பராமரிப்பு பணியால் திருச்சி-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி- தஞ்சாவூர் பயணிகள் ரெயில் 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி,

திருச்சி கோட்டத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் திருச்சி- தஞ்சாவூர் பயணிகள் ரெயில் (வண்டி எண் -76824), தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரெயில் (வண்டி எண்- 76827) வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56824 திருச்சி- மயிலாடுதுறை பயணிகள் ரெயில் வருகிற 5-ந்தேதி வரை கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 16234 திருச்சி- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மயிலாடு துறைக்கு வருகிற 31-ந்தேதி வரை (அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், அக்டோபர் 7 மற்றும் 8-ந் தேதிகள் தவிர) 60 நிமிடம் தாமதமாக சென்றடையும்.

தாமதமாக புறப்படும்

வண்டி எண் 56821 மயிலாடுதுறை- திருநெல்வேலி பயணிகள் ரெயில் வருகிற 31-ந்தேதி வரை (அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) திருச்சிக்கு வழக்கமான நேரத்தை விட 45 நிமிடம் தாமதமாக வந்தடையும். வண்டி எண் 56821 மயிலாடுதுறை-திருநெல்வேலி பயணிகள் ரெயில் வருகிற 5-ந்தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story